செய்திகள்

பேரக்குழந்தைகளுடன் 2.0 கண்டுகளித்த ரஜினிகாந்த்!

DIN

பேரக்குழந்தைகளுடன் 2.0 திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டுகளித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் 3-ஆவதாக உருவாகியுள்ள 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

வெளியான முதல் வாரத்தில் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழ் திரைப்படம் இந்தளவுக்கு வசூல் செய்திருப்பது இதுவே முதல்முறை. 

இந்நிலையில், 2.0 திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா உடன் திரையங்கில் கண்டுகளித்தார். மேலும் தங்களது பேரக்குழந்தைகளான லிங்கா மற்றும் யாத்ரா ஆகியோரையும் உடன் அழைத்துச்சென்றார். இப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

ரஜினி மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷ் தம்பதியரின் மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரா என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT