செய்திகள்

ஏமாற்றமளிக்கும் ஷாருக் கானின் ஜீரோ பட வசூல்!

படம் வெளியான நாள் முதல் எதிர்மறையான விமரிசனங்களே அதிகமாகக் கிடைத்துள்ளன...

எழில்

ஷாருக் கான், கத்ரினா கயிஃப், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள ஜீரோ படம் கடந்த 21-ம் தேதி வெளியானது. இப்படத்தின் இயக்குநர் ஆனந்த் எல். ராய் - தனு வெட்ஸ் மனு, தனு வெட்ஸ் மனு ரிடர்ன்ஸ், ரான்ஜானா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் 3 அடி உயரம் உள்ளவராக ஷாருக் கான் நடித்துள்ளார். வித்தியாசமான வேடத்தில் ஷாருக் கான் நடித்துள்ளதால் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. 

ஆனால், படம் வெளியான நாள் முதல் எதிர்மறையான விமரிசனங்களே அதிகமாகக் கிடைத்துள்ளன. இதனால் இப்பட வசூலில் அதிகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதல் நாளன்று இந்தியாவில் ரூ. 20 கோடி கிடைத்தது. சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் ரூ. 18 கோடி, ரூ. 21 என முறையே கிடைத்துள்ளதால் இதன் வசூல் இதுவரை கிட்டத்தட்ட ரூ. 60 கோடிக்கும் குறைவாகவே உள்ளது. ஷாருக் கான் போன்ற ஒரு பெரிய நடிகருக்கு இந்த வசூல் மிகவும் குறைவாகும். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். எனினும் கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக இந்த வாரம் இதன் வசூல் அதிகமாக வாய்ப்புள்ளதா என்பது இனிமேல்தான் தெரிய வரும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT