கிரேஸி மோகனின் நாடகக்குழுவைச் சேர்ந்த நடிகர் சீனு மோகன் காலமானார்!
கிரேஸி மோகனின் கிரேஸி கிரியேஷன்ஸ் தொடங்கப்பட்ட 1979-ம் வருடம் முதல் மேடை நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்...
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்ததோடு பல திரைப்படங்களிலும் நடித்த சீனு மோகன் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 61.
கிரேஸி மோகனின் கிரேஸி கிரியேஷன்ஸ் தொடங்கப்பட்ட 1979-ம் வருடம் முதல் மேடை நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் சீனு மோகன். கிரேஸி மோகனின் நாடகங்களில் சீனு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். தளபதி, இறைவி, வடசென்னை, செக்கச் சிவந்த வானம், கோலமாவு கோகிலா போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு மேடை நாடகங்களில் நடிப்பதை நிறுத்தி திரைப்படங்களில் அதிகக் கவனம் செலுத்தினார்.
நாளை மறுநாள் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனு மோகனின் மறைவுக்கு கிரேஸி மோகன் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.