செய்திகள்

வெளியானது மணிரத்னத்தின் புதிய படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர்! 

நடிகர்கள் விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி மற்றும் சிலம்பரசன் உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

சென்னை: நடிகர்கள் விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி மற்றும் சிலம்பரசன் உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியாகியுள்ளது.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது.

"செக்கச்சிவந்த வானம்" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன் (STR), விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு  A.R.ரஹ்மான் இசையமைக்கிறார். பாடல்கள் அனைத்தையும் வைரமுத்து எழுதுகிறார். படத்தின் ஒளிப்பதிவை சந்தோஷ் சிவன் கவனிக்கிறார்.

வரும் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் வீட்டில் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார்!

வரைவு பட்டியல்: விடுபட்ட வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்: தேஜஸ்வி!

ஜாகுவார் லேண்ட் ரோவர் சிஇஓ-வாக முதல் தமிழர்! யார் இந்த பாலாஜி?

கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்! பயணிகள் கடும் அவதி

இன்னும் நாணமோ... டெல்னா டேவிஸ்!

SCROLL FOR NEXT