முகப்பு
செய்திகள்

காலா ரிலீஸ் தேதி: நடிகர் தனுஷ் அறிவிப்பு

காலா ரிலீஸ் தேதியை வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

Updated On : 10 பிப்ரவரி, 2018 at 7:32 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:43 PM

'கபாலி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'கரிகாலன்' என்கிற 'காலா'. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. 

நடிகர் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷின்டே, அருள் தாஸ், ஹூமா குரேஷி, திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரி ராவ், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

Advertisement

இப்படம் வருகிற ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் தற்போது ட்வீட் செய்துள்ளார். இச்செய்தி ரஜினி ரசிகர்களிடம் உற்சாகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தின் வெளியீடு கிராபிக்ஸ் பணிகள் காரணமாக தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.