செய்திகள்

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எழுத்தாளர் பாலகுமாரன்

தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல சினிமாவிலும் எழுத்தாளர் பாலகுமாரனின் பங்களிப்பு முக்கியமானது.

சினேகா

தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல சினிமாவிலும் எழுத்தாளர் பாலகுமாரனின் பங்களிப்பு முக்கியமானது. அவருடைய எழுத்துக்களைப் பின்பற்றி வாழ்ந்தவர்கள் பலர். அவரால் எழுத்தாளரானவர்களும் உள்ளனர். சூப்பர் ஹிட் படங்களான பாட்ஷா, குணா, முகவரி, சிட்டிசன், உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் வசனம் எழுதியுள்ளார்.

ரசிகர்களின் அன்பால் எழுத்துச் சித்தர் என்று அழைக்கப்படும் பாலகுமாரன் தற்போது உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

விரைவில் அவர் நலம்பெற வேண்டுமென்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய பிரார்த்தனைகளை பதிவு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT