செய்திகள்

பொங்கல் போட்டியில் குதித்தது ஸ்கெட்ச்: பலமான போட்டியை உறுதிசெய்யும் விடியோ வெளியீடு!

தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள ஸ்கெட்ச், பொங்கல் வெளியீட்டை உறுதி செய்துள்ளது. ஜனவரி 12 அன்று வெளிவரவுள்ளது...

எழில்

தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், மதுரவீரன், குலேபகாவலி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய 5 படங்கள் பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள ஸ்கெட்ச், பொங்கல் வெளியீட்டை உறுதி செய்துள்ளது. ஜனவரி 12 அன்று வெளிவரவுள்ளது.

விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் படத்தின் கதைக் களம் வடசென்னையைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாலு பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் தமன் இசையமைத்துள்ளார். வட சென்னையில் படித்த டாக்டர்கள், வக்கீல்கள் என்று உயர்மட்ட மக்களும் இருக்கிறார்கள். அப்படி ஒருவரின் பின்னணிதான் கதைக்களம் இது. காதல், ஆக்ஷன், நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் கதாநாயகியாக தமன்னா நடித்துள்ளார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள விளம்பர விடியோ, பொங்கல் போட்டி கடுமையாக இருப்பதை உறுதி செய்வதாகவே உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசியில் சிலம்பம் சுற்றிய முதல்வர் ஸ்டாலின்!

மா இன்டி பங்காரம்: இயக்குநர் நந்தினியுடன் 3வது முறையாக இணையும் சமந்தா!

சென்னையில் ஒரு சொட்டு மழை இருக்காதா? நவ. 5 வரையிலான நிலவரம்!

ஜகதீப் தன்கருக்கு வழியனுப்பு விழா நடத்த காங்கிரஸ் கோரிக்கை!

நடிகர் பிரபு வீடு, அமெரிக்க துணை தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் !

SCROLL FOR NEXT