முகப்பு
செய்திகள்

110 திரையரங்குகளில் 25 நாள்கள்: அருவி படம் சாதனை!

எந்தவொரு பிரபல நடிகரும் நடிக்காமல் புதுமுக நடிகர், புதுமுக இயக்குநர் பங்களிப்பில் சத்தமில்லாமல் வெளிவந்த அருவி படம்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:56 AM
பகிர்:

சிறிய படங்கள் மூன்று நாள்கள் ஓடினாலே அது பெரிய விஷயமாகக் கருதுகிற தமிழ்த் திரையுலகில் எந்தவொரு பிரபல நடிகரும் நடிக்காமல் புதுமுக நடிகர், புதுமுக இயக்குநர் பங்களிப்பில் சத்தமில்லாமல் வெளிவந்த அருவி படம் பிரமாண்ட வெற்றியை அடைந்துள்ளது.

'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'அருவி'. அருண் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - பிந்து மாலினி & வேதாந்த் பரத்வாஜ். படவிழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற படம் சமீபத்தில் வெளியாகி, தனது 25-வது நாளை நிறைவு செய்துள்ளது.

தமிழகம் முழுக்க 110 திரையரங்குகளில் 25 நாள்கள் ஓடி சாதனை செய்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 12-ம் தேதி வரை திரையரங்குகளில் தொடர்ந்து ஓடும் என்பதே அருவி போன்ற சிறிய படத்தின் மகத்தான சாதனையாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.