செய்திகள்

முதல் வாரத்தில் ரூ. 200 கோடி வசூலித்த ‘சஞ்சு’ ஹிந்திப் படம்: பாகுபலி 2, டங்கல் வசூல் சாதனைகளைத் தாண்டுமா?

சஞ்சு படம் தற்போது முதல் வாரத்தில் ரூ. 200 கோடி வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது...

எழில்

நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை, திரைப்படமாக வெளிவந்துள்ளது. சஞ்சு என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர், சஞ்சய் தத் வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், பரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா, அனுஷ்கா சர்மா, சோனம் கபூர், தியா மிர்சா போன்றோர் நடித்துள்ளார்கள். கடந்த வெள்ளியன்று இந்தப் படம் வெளியானது.

சஞ்சு படம் தற்போது முதல் வாரத்தில் ரூ. 200 கோடி வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்பு பாகுபலி 2 படம் (ஹிந்தி) 6 நாள்களில் ரூ. 200 கோடியைத் தொட்டது. இதையடுத்து டைகர் ஜிந்தா ஹை படமும் ஏழு நாள்களில் ரூ. 200 கோடியை எட்டியது. இந்நிலையில் சஞ்சு படமும் ஏழு நாள்களில் ரூ. 203 கோடி வசூலை அடைந்து சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் 3 இடியட்ஸ் படம் இந்தியாவில் வசூலித்த ரூ. 202 கோடி வசூலை ஏழே நாள்களில் தாண்டியுள்ளது சஞ்சு படம். 

பாகுபலி 2 ஹிந்திப் பதிப்பு இந்தியாவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. அடுத்ததாக டங்கல் படம் ரூ. 375 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இரண்டாம் இடம் பிடித்தது. இதையடுத்து சஞ்சு படம் இந்த இரு படங்களின் வசூலையும் தாண்டுமா என்கிற எதிர்பார்ப்பு தற்போது நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT