செய்திகள்

தெறி, மெர்சல், .... ?: அதிகாரபூர்வ அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கும் விஜய் ரசிகர்கள்!

எழில்

அஜித் - சிவா கூட்டணி போல விஜய் - அட்லி கூட்டணியும் பிரிக்கமுடியாததாக உள்ளது.

தெறி, மெர்சல் படங்களுக்குப் பிறகு அட்லியின் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெறி, மெர்சல் ஆகிய இரு படங்களும் வெற்றிகரமாக ஓடியதால் அட்லியின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க முடிவெடுத்துள்ளார் விஜய். அதிலும் மெர்சல் படம் வசூலில் பல சாதனைகள் புரிந்துள்ளதால் விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் சாத்தியமாகவுள்ளது. மெர்சல் படம் போல இந்தப் படமும் அரசியல் பின்னணியைக் கொண்ட படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

மூன்றாவது முறையாக விஜய் - அட்லி இணையும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சர்கார் படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இதையடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT