ஸ்ரீதேவி மகள் அறிமுகமான படம், வசூலில் சாதனை: தயாரிப்பாளர் பெருமிதம்!
இந்தப் படம் முதல் வாரத்தில் இந்தியாவில் மட்டும் ரூ. 51.55 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது...
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஹிந்தியில், தடக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
ஜான்வி, இஷான் நடிப்பில் ஷஸாங் கைதான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - தடக். மராத்திப் படமான சாய்ரத்தின் ரீமேக் இது. இந்தப் படம் கடந்த வாரம் வெளியானது.
இந்தியாவில் 2235, உலகளவில் 556 எனக் கிட்டத்தட்ட 2800 (2791) திரையரங்குகளில் தடக் படம் வெளியாகியுள்ளது.
Advertisement
இந்நிலையில் இந்தப் படம் முதல் வாரத்தில் இந்தியாவில் மட்டும் ரூ. 51.55 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. புதுமுகங்கள் நடித்து அதிகம் வசூலித்த படம் என இந்தப் புள்ளிவிவரங்களைப் படத்தயாரிப்பாளரான கரண் ஜோஹர் ட்விட்டரில் தெரிவித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் படம் முதல் நாளன்று இந்தியாவில் ரூ. 8.71 கோடியும் முதல் மூன்று நாள்களில் ரூ. 34 கோடியும் வசூலித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.