செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மானின் ஆஸ்தான பாடலாசிரியராக மாறும் விவேக்: அடுத்தடுத்து கிடைக்கும் வாய்ப்புகள்!

தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியர் விவேக்கின் வளர்ச்சி அதிவேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது...

எழில்

தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியர் விவேக்கின் வளர்ச்சி அதிவேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதினார் விவேக். அதில், ஆளப்போறான் தமிழன் பாடல் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இது விவேக்கின் திரை வாழ்க்கைக்குப் பெரிய திருப்புமுனையாக மாறிவிட்டது. இதையடுத்து ரஹ்மான் விரும்பும் பாடலாசிரியராக வளர்ச்சி பெற்றுள்ளார் விவேக்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய் நடிக்கும் சர்கார் படத்திலும் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார் விவேக். இத்தகவலை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதுதவிர சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திலும் விவேக் பாடல்களை எழுதுகிறார். இத்தகவலை அப்படத்தைத் தயாரிக்கும் 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது. 

மேஜிக் நிபுணருடன் (ரஹ்மான்) அடுத்தடுத்து 3 படங்களில் பணிபுரிகிறேன் என்று ட்விட்டரில் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் விவேக். 

இதனால் மெர்சல், சர்கார், சிவகார்த்திகேயன் படம் என ஏ.ஆர். ரஹ்மானின் ஆஸ்தான பாடலாசிரியராக மாறிக்கொண்டிருக்கிறார் விவேக். இளமையான வார்த்தைகள் மட்டுமல்லாமல் ஆங்கில வார்த்தைகள் கலந்து எழுதுவதிலும் சிறப்பாகச் செயல்படுவதால் விவேக்கை ரஹ்மான் தொடர்ந்து தேர்வு செய்கிறார் என்று அறியமுடிகிறது. சிலவருடங்களுக்கு முன்பு தமிழ்த் திரையுலகில் இதுபோன்ற ஒரு கவனத்தை ஈர்த்தார் வைரமுத்துவின் மகனான மதன் கார்க்கி. இந்நிலையில் தற்போது அதேபோன்ற ஒரு கவனத்தையும் வளர்ச்சியையும் அடைந்து வருகிறார் விவேக். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவையின் பாதுகாப்பு ரத்து! டிரம்ப் உத்தரவு!

கொடியேற்றத்துடன் தொடங்கியது வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!

கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்: மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பாம் திரைப்பட டிரைலர்!

SCROLL FOR NEXT