முகப்பு
செய்திகள்

வழக்கமான தமிழ் பொதுபுத்தி மாறவேண்டும்! ட்விட்டரில் பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி!

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் - 2.0. சில வருடங்களுக்கு முன்பு வெளியான

Updated On : 4 ஜூன், 2018 at 1:01 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:43 PM

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் - 2.0. சில வருடங்களுக்கு முன்பு வெளியான தமிழ்படம் படத்தின் அடுத்தப் பாகத்தின் பெயர் தமிழ்படம் 2.0. 

தமிழ்படத்தை இயக்கிய சி.எஸ். அமுதன் இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். மிர்ச்சி சிவா, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், திஷா பாண்டே போன்றோர் தமிழ்படம் இதில் நடிக்கிறார்கள் படத்தின் தலைப்பிலேயே கிண்டல் தொனி உள்ளதால் முதல் பாகம் போலவே இந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகளும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சனிக்கிழமை காலை வெளியான டீஸர் அதனை ஊர்ஜிதப்படுத்தியது.. நடிகர்கள் அஜித், விஜய், விஷால் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட பல பிரபலங்களை கலாய்த்துள்ளனர்.

Advertisement

தமிழ் படம் முதல் பாகத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி கோலிவுட்டுக்கு மறுபிரவேசம் செய்தார் நடிகை கஸ்தூரி. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் அதே போன்ற ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ரசிகர் தாயான பெண் இப்படி ஐட்டம் டான்ஸ் ஆடுவது சரியா என கேட்டுள்ளார்.

அதற்கு கஸ்தூரி,  'செக்ஸியாக இருக்கும் பெண் புத்திசாலியாக இருக்க மாட்டாள். அவள் தாய்மைக்கு தகுந்தவள் அல்ல. அவளுக்கு பெருமதி இருக்காது என்றெல்லாம் நினைக்கும் இந்த வழக்கமான தமிழ் பொது புத்தி மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  

எப்போதாவது ஒரு நடிகரைப் பார்த்து, நீங்கள் ஏன் மது போதையில் இருப்பதாக நடிக்கிறீர்கள்? ஏன் செக்ஸியான பாடல்களுக்கு நடனமாடுகிறீர்கள்? ஏன் காதல் காட்சிகளில் நடிக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கிறோமா?’ என்று ட்விட்டரில் பதில் கொடுத்துள்ளார். 

கேள்விக்க்கு பதிலாக சில கேள்விகளை எழுப்பிய கஸ்தூரியின் ட்வீட்டில் இருக்கும் உண்மையை உணர்ந்த ரசிகர் அதற்கு பதிலேதும் அளிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.