ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட வரிசையின் முதல் படமான ‘டாக்டர் நோ’ படத்தின் கதாநாயகி யூனிஸ் கேசன் (Eunice Gayson) (90) காலமானார்.
‘டாக்டர் நோ’ 1962-ம் ஆண்டு வெளியான படம். இப்படத்தில் பிரபல துப்பறியும் வீரர் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் சீன் கேனரி நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக உருசலா ஆண்ட்ரஸ் மற்றும் யூனிஸ் கேசன் ஆகியோர் நடித்திருந்தனர். ஃபிரம் ரஷ்யா வித் லவ் படத்திலும் சீன் கேனரியுடன் நடித்த அவர், சில ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த யூனிஸ் கேசன், கடந்த 8-ஆம் தேதி லண்டனில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகம் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.