சல்மான் கான், ஜாக்குலின் பெர்னாண்டஸ், அனில் கபூர், பாபி தியோல் போன்றோர் நடிப்பில் ரெமோ டிசெளசா இயக்கத்தில் உருவான ரேஸ் 3 படம் நேற்று வெளியானது.
சல்மான் கான் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், மோசமான விமரிசனங்களைப் பெற்றாலும் வசூலில் எந்தவொரு குறையையும் வைக்கவில்லை. இந்தியாவில் இந்த வருடம் வெளியான படங்களில் முதல் நாளன்று அதிக வசூலைப் பெற்ற படம் என்கிற சாதனையைச் செய்துள்ளது.
ரூ. 25.10 கோடி வசூலித்த பாகி 2 பட சாதனையைத் தாண்டி முதல் நாளன்று ரூ. 29.17 கோடி வசூலித்துள்ளது ரேஸ் 3 படம்.
2018ல் அதிக முதல் நாள் வசூல்
ரேஸ் 3 - ரூ. 29.17 கோடி
பாகி 2 - ரூ. 25.10 கோடி
பத்மாவத் - ரூ. 19 கோடி
இதற்கு முன்னால் பஜ்ரங்கி பைஜான் (ரூ.102.60 கோடி), சுல்தான் (ரூ. 105.53 கோடி), டைகர் ஹிந்தா ஹை (ரூ. 114.93 கோடி) ஆகிய மூன்று சல்மான் கான் படங்களும் மூன்று நாள்களில் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளன. இந்த வரிசையில் ரேஸ் 3 படமும் இடம்பெறுமா என்கிற எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது.