தயாரிப்பாளர் ஆனார் நடிகை ஷ்ருதி ஹாசன்!
ஷ்ருதி ஹாசன் தயாரிக்கும் முதல் படம் இது...
தி மஸ்கிட்டோ பிலாசபி (The Mosquito Philosophy).
ஏதோ ஆங்கிலப் படத்தின் தலைப்பு என்று எண்ணிவிடாதீர்கள். தமிழ்ப் படத்தின் தலைப்புதான் இது.
லென்ஸ் படத்தை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் அடுத்தப் படமான தி மஸ்கிட்டோ பிலாசபி-யை தயாரிக்கிறார் 32 வயது நடிகை ஷ்ருதி ஹாசன். தன்னுடைய இசிட்ரோ மீடியா (isidromedia) நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். ஷ்ருதி ஹாசன் தயாரிக்கும் முதல் படம் இது.
Advertisement
இயக்குநராக மட்டுமல்லாமல் ஜெயபிரகாஷ் இந்தப் படத்தில் நடிக்கவும் செய்கிறார். சிந்து ஜெயபிரகாஷ், ரவி கதிரேசன், பிரதீப் தாமோதரன் போன்றோரும் நடிக்கிறார்கள்.