செய்திகள்

நடிகர் விஜய் பிறந்த நாளுக்கு வித்யாசமாக வாழ்த்திய விஜய் டிவி!

நடனத்துக்காகவும், உடல் மொழிக்காகவும், மிகையற்ற இயல்பான நடிப்புக்காகவும்

சினேகா

அட்டகாசமான நடனத்துக்காகவும், உடல் மொழிக்காகவும், மிகையற்ற இயல்பான நடிப்புக்காகவும் பெயர் பெற்றவர் நடிகர் விஜய். அவரது காமெடியும், குரல் மாடுலேஷனும் அனைவரையும் ரசிக்க வைத்துவிடும். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு அதிகமான இள வயது ரசிகர்களை உடையவர் விஜய் என்பது அனைவரும் அறிந்ததே.

இன்று நடிகர் விஜய் தனது 44 பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடுகிறார். இன்றைய தினத்தில் நடிகர் விஜய்யின் 62-வது திரைப்படத்துக்கு சர்கார்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தி சுரேஷ், வரலெட்சுமி, ராதாரவி, யோகிபாபு, பழ. கருப்பையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை - ஏ.ஆர். ரஹ்மான். க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். சர்கார் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் பிறந்த நாளை (ஜூன் 22) முன்னிட்டு, படத்தின் மூன்று போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இது ஒரு புறமிருக்க, சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு பலதரப்பட்ட ரசிகர்களும், பிரபலங்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மின் ஊடகங்களும் விஜய் பற்றிய கட்டுரைகளை பதிவிட்டுள்ளது.

HBD என்ற ஹேஷ்டேக்கில் வாழ்த்துக்களைக் கூறி வைரலாக்கி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். தற்போது தமிழ்நாட்டில் நிலவு வரும் பிரச்னைகளை முன்னிட்டு தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்த்து விடும் படி ரசிகர்களிடம் ஏற்கனவே விஜய் கேட்டுக் கொண்டிருந்தும், ரசிகர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விதவிதமாக போஸ்டர்களை ஒட்டி தங்கள் அன்பினை தெரிவித்து வருகிறார்கள்.

மாணவர்கள் ஒருபடி மேலே சென்று தங்கள் வாட்ஸ் அப் ப்ரொஃபைல் படங்களில் விஜய் படத்தை வைத்து, ஸ்டேட்டஸில் விஜய் பாடங்களை பதிந்து, 'பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா’, 'வி லவ் யூ தளபதி’ என்று தங்கள் மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜயை வாழ்த்தி இப்படி ஒரு பதிவை எழுதியுள்ளது. "தளபதி #விஜய்! இது வெறும் பெயரல்ல! ஒரு பெருங்கூட்டத்தின் உணர்ச்சிப் பிரவாகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

கிளை நூலகருக்கு விருது

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT