செய்திகள்

சிறிய இடைவெளிக்குப் பிறகு ரஜினி படத்தில் தொடக்கப் பாடலைப் பாடுகிறார் எஸ்.பி.பி.

இந்தப் படத்தின் தொடக்கப் பாடலை எஸ்.பி.பி. பாடவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது... 

எழில்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. 

காலா, 2.0 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள ரஜினி, அரசியல் பரபரப்புகளுக்கிடையே இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார். ரஜினியின் உறவினரான அனிருத், முதல்முறையாக ரஜினி நடிக்கும் படத்துக்கு இசையமைக்கவுள்ளார். இதுவரை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயண் தான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் மூலமாக முதல்முறையாக கார்த்திக் சுப்புராஜும் அனிருத்தும் இணைகிறார்கள்.

இந்நிலையில் இந்தப் படத்தின் தொடக்கப் பாடலை எஸ்.பி.பி. பாடவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பாபா படத்தின் தொடக்கப் பாடலை ஷங்கர் மகாதேவன் பாடினார். அந்தப் படம் தோல்வியடைந்ததையடுத்து அடுத்து வந்த சந்திரமுகியில் மீண்டும் எஸ்பிபியே முதல் பாடலைப் பாடினார். சிவாஜி, எந்திரன், கோச்சடையான், லிங்கா ஆகிய படங்களின் தொடக்கப் பாடல்களும் எஸ்.பி.பி.-க்கே வழங்கப்பட்டன. ஆனால், அடுத்து வந்த கபாலி, காலா படங்களின் தொடக்கப் பாடல்களை எஸ்.பி.பி. பாடவில்லை. இரு படங்களிலும் எஸ்.பி.பி.க்கு ஒரு பாடலும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் மீண்டும் பாடவுள்ளார் எஸ்.பி.பி. அதுவும் வழக்கமான தொடக்கப் பாடலை.

ரஜினி படத்தில் தொடக்கப் பாடலைப் பாடிய எஸ்.பி.பி. 

பாபா ✖
சந்திரமுகி ✔
சிவாஜி ✔
எந்திரன் ✔
கோச்சடையான் ✔
லிங்கா ✔
கபாலி ✖
காலா ✖
கார்த்திக் சுப்புராஜ் படம் ✔

ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன், வந்தேண்டா பால்காரன், ஒருவன் ஒருவன் முதலாளி பாடல்களின் வரிசையில் இந்தப் படத்தின் தொடக்கப் பாடலும் இடம்பெறுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்! மோடி

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!

ஆசியக் கோப்பையை ஐக்கிய அமீரகத்திடம் ஒப்படைத்தார் நக்வி!

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு

நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா! ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு!

SCROLL FOR NEXT