முகப்பு
செய்திகள்

டிக் டிக் டிக் படம் மிகப்பெரிய வெற்றி: தயாரிப்பாளர் அறிவிப்பு!

டிக் டிக் டிக் படம் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:04 PM
பகிர்:

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் போன்றோர் நடித்துள்ள படம் - டிக் டிக் டிக். ஜெயம் ரவியின் மகன் ஆரவ்-வும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ள இந்தப் படம் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் டிக் டிக் டிக் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதாகப் படத்தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் கூறியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது:

டிக் டிக் டிக் படம் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. ஒரு தயாரிப்பாளராக இது என் 25-வது வருடம். எங்களுடைய 11-வது படம் - டிக் டிக் டிக். நாங்கள் வித்தியாசமான படங்களை எடுக்க எப்போதும் ஆர்வம் செலுத்துவோம். அதை டிக் டிக் டிக் படமும் நிரூபித்துள்ளது. மேலும், இதுபோன்ற படங்களுக்கு ரசிகர்கள் எப்போது ஆதரவு தந்துவருகிறார்கள். 

Advertisement

ஆரம்பக் கட்டப் பணிகளில் இருந்து வெளியீடு வரை இது ஓர் 2 வருட அனுபவம். இதற்கு ஒத்துழைத்த படக்குழுவினருக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments