முகப்பு
செய்திகள்

புதிய கூட்டணி ஆரம்பம்: சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு!

இந்தப் படம் எந்தப் படத்தின் தொடர்ச்சியும் அல்ல, புதிய கதையில் இந்தப் படத்தை இயக்கிறேன் என்றும்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:04 PM
பகிர்:

பார்ட்டி படத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. 

சென்னை-600028 II படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பார்ட்டி’. இந்தப் படத்தில் ஷாம், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கெஸண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், நாசர், சந்திரன், சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். பிரேம்ஜி இசையமைத்துள்ளார். 

நடிகர் சிம்பு, மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் சிம்பு - வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணையும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். மேலும் இந்தப் படம் எந்தப் படத்தின் தொடர்ச்சியும் அல்ல, புதிய கதையில் இந்தப் படத்தை இயக்கிறேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments