முகப்பு
செய்திகள்

விரைவில் ‘விஸ்வரூபம்’ டிரெய்லர்: கமல் அறிவிப்பு

விஸ்வரூபம் படத்துக்குப் பிறகு அதன் அடுத்தப் பாகமான விஸ்வரூபம் 2 படத்தைத் தொடங்கினார் கமல். ஆனால்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, ராகுல் போஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

விஸ்வரூபம் படத்துக்குப் பிறகு அதன் அடுத்தப் பாகமான விஸ்வரூபம் 2 படத்தைத் தொடங்கினார் கமல். ஆனால் அந்தப் படத்தின் பணிகள் முழுமையடையாததால் வேறு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் சிறிது இடைவெளிக்குப் பிறகு விஸ்வரூபம் 2 படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளார் கமல். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ஹிந்தி, தெலுங்குப் பதிப்புகளுக்கான டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம்  கடைசிக்கட்டப் படப்பிடிப்பையும் நடத்தினார் கமல். சென்னையில் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி தரும் மையத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கமல், ஆண்ட்ரியா கலந்துகொண்டார்கள்.

டிசம்பர் மாதத்தில் விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிக்கட்ட சிஜி, சவுண்ட் வேலைக்காக அமெரிக்கா சென்றார் கமல். இந்நிலையில் விஸ்வரூபம் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளதாக ஃபேஸ்புக்கில் தகவல் தெரிவித்துள்ளார் கமல்.

முழு கட்டுரையைப் படிக்க →