செய்திகள்

மீண்டும் அமெரிக்கா சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி: புகைப்படங்கள் வெளியீடு!

நயன்தாராவுடன் மீண்டும் அமெரிக்கா சென்றுள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன், இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்...

எழில்

நயன்தாராவுடன் மீண்டும் அமெரிக்கா சென்றுள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன், இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஜோடியாக 'நானும் ரெளடிதான்' என்ற படத்தில் நடித்தார் நயன்தாரா. அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். இதனையடுத்து, நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

நானும் ரெளடிதான் படப்பிடிப்பின் இறுதி நாளில் படக்குழுவினர் செல்பி புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். அப்போது விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகிய இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தன. பிறகு, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒன்றாக இருப்பது போன்ற மற்றொரு படமும் வெளியானது. கடந்த வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற சைமா விருது நிகழ்ச்சிக்காக அந்த நாட்டுக்குச் சென்ற நயன்தாரா, விமான நிலையத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து சென்றார். இந்தக் காட்சியின் வீடியோவும் படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.

கடந்த செப்டம்பர் மாதம் இயக்குநர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாட அவருடன் இணைந்து நியூயார்க் சென்றார் நயன்தாரா. பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்று விடுமுறையைக் கழித்துள்ளார்கள். 

அருமையான நினைவுகளுடன் அமெரிக்காவிலிருந்து திரும்புகிறோம். விரைவில் அமெரிக்காவுக்கு மீண்டும் செல்வோம் என்று ட்வீட் செய்து புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அமெரிக்கச் சுற்றுப்பயணத்தில் பாடகி பிரகதியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT