முகப்பு
செய்திகள்

நடிகர் விஜய் நடிக்கும் தமிழ் படம் நோட்டா கிளப்பிய சர்ச்சை என்ன?

டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டாவை திரை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ், மலையாள திரை ரசிகர்களையும் கவர்ந்த

Updated On : 11 மார்ச், 2018 at 11:53 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:57 PM


 
டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டாவை திரை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ், மலையாள திரை ரசிகர்களையும் கவர்ந்த படமான அர்ஜுன் ரெட்டியில் நடித்துப் புகழ் பெற்றவர். நாக் அஸ்வின் இயக்கத்தில், தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநதி’யிலும் விஜய் நடித்து வருகிறார். இவர் அடுத்து  நடிக்கவுள்ள நேரடி தமிழ்ப் படம்தான் ‘நோட்டா’. அர்ஜுன் ரெட்டி' படப் புகழுக்குப் பிறகு தமிழில் நேரடியாக நடிக்கவிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. #KollywoodWelcomesVijayDeverakonda எனும் ஹாஷ்டேக் உருவாக்கி ரசிகர்கள் விஜயை தமிழுக்கு வரவேற்றனர்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மெஹ்ரீன் நடிக்கவுள்ளார். இவர் 'நெஞ்சில் துணிவிருந்தால் எனும் படத்தில் அறிமுகமானார். சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனின் மகள் சாந்தா ரவி கே.சந்திரன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். எழுத்தாளர் ஷான் கருப்புசாமி கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். ஷான் கருப்பசாமியின் புகழ்ப் பெற்ற கதையான வெட்டாட்டம் என்ற நாவலைத் தழுவி இப்படத்தின் கதையை அமைத்துள்ளனர்.

இது ஒரு முழுநீள அரசியல் படம் என்பது தலைப்பிலேயே தெரிந்து கொள்ளலாம். இப்படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். அவர் ஏற்கனவே ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். நோட்டா அவரது மூன்றாவது படமாகும். இப்படத்தின் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா, வாக்களித்த மையுடன் நடுவிரலைக் காட்டியிருப்பது சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.