செய்திகள்

ஏலத்துக்கு விடப்படும் நடிகை ஸ்ரீவித்யாவின் சொத்து! வருமானவரித் துறை நடவடிக்கை!

1996 முதல் இறக்கும்வரை நடிகை ஸ்ரீவித்யா (53) வருமான வரி கட்டாததால் ரூ. 45 லட்சம் வரைக்கும் உயர்ந்துள்ள...

எழில்

2006-ம் வருடம் இறந்த நடிகை ஸ்ரீவித்யாவுக்குச் சொந்தமான ஃபிளாட்டை ஏலத்தில் விட வருமானவரித் துறை முடிவு செய்துள்ளது. 

1996 முதல் இறக்கும்வரை நடிகை ஸ்ரீவித்யா (53) வருமான வரி கட்டாததால் ரூ. 45 லட்சம் வரைக்கும் உயர்ந்துள்ள நிலுவைத் தொகையைப் பெற இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சென்னையில் உள்ள அந்த ஃபிளாட்டில் 2005 முதல் உமா சங்கர் என்கிற வழக்கறிஞர் வசித்துவருகிறார். மாத வாடகையாக ரூ. 13,000-ஐ வருமானவரித் துறைக்கு வழங்கி வருகிறார். ஆனால் இதைக் கொண்டு நிலுவைத் தொகையை ஈடுகட்ட முடியாததால் வீட்டை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மலையாள நடிகரும் அரசியல்வாதியுமான கேபி கணேஷ் குமார், ஸ்ரீவித்யாவின் சொத்துகளுக்குச் சட்டபூர்வ பாதுகாவலராக உள்ளார். அவரின் அனுமதியைப் பெற்று ஃபிளாட்டை ஏலத்துக்கு விடுகிறது வருமானவரித் துறை. 

மார்ச் 26 அன்று சென்னையில் இந்த ஏலம் நடைபெறுகிறது. ஃபிளாட்டின் அடிப்படை விலை ரூ. 1.14 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT