முகப்பு
செய்திகள்

தன் படம் ரிலீஸ் தள்ளிப் போனதன் காரணம் தெரியாத நடிகர் அரவிந்த் சாமி வருத்தம்!

அரவிந்த் சாமி, அமலா பால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா

Updated On : 11 மே, 2018 at 4:43 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:31 PM

அரவிந்த் சாமி, அமலா பால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா உள்ளிட்டோர் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். இன்று (மே 11) வெளியாகவிருந்த இத்திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை. அதற்கான காரணமும் சொல்லப்படவில்லை. இரவு 11 மணியளவில் மேல் பாஸ்கர் ஒரு ராஸ்கல் நாளை வெளியாகாது என அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர், 'பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப் போகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. படத்தின் டிக்கெட்டுகளை பொதுமக்கள் அட்வான்ஸ் புக்கிங் செய்த பிறகும் மீண்டும் வெளியீடு தள்ளிப் போனதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. படம் வெளியாகும் என எதிர்ப்பார்த்தவர்களுக்கு இது ஏமாற்றத்தையே தரும். எனக்கும் வருத்தமாகவும் ஏமாற்றமாகவும்தான் உள்ளது.

இந்தப் படத்தின் போது ஷூட்டிங் மற்றும் புரோமஷன் உள்ளிட்ட இதர விஷயங்களுக்கு நான் படக்குழுவினருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பக்கபலமாக இருந்திருக்கிறேன். இனி ஒருபோதும் ரிலீஸ் தேதியை நான் அறிவிக்கமாட்டேன். அனைவரும் குடும்பத்துடன் சந்தோஷமாக பார்க்கும் வகையில் இந்தப் படம் இருக்குமென்று உறுதியாகச் சொல்வேன்.  இன்று வெளியாகும் மற்ற படங்கள் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டிருந்தார் அரவிந்த சாமி.

Advertisement

இதற்கு முன்னால் பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் ஐந்து முறை தள்ளிப் போயிருக்கிறது.  கடந்த ஜனவரி 12-ம் தேதியும், மார்ச் 29-ம் தேதியும், ஏப்ரல் 27-ம் தேதியும், மே 11-ம் தேதியான இன்றும் வெளியாவதிலிருந்து தள்ளிப்போனது. இதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.

படம் மே 18 வெளியாகலாம் எனவும், இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறுகின்றனர் படக்குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.