முகப்பு
செய்திகள்

கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்! (படங்கள்)

கேன்ஸ் திரைப்பட விழாக்களின் ரெட் கார்பெட்டை மிகச் சிறப்பாக ஐஸ்வர்யா ராயைத் தவிர யாரும் அலங்கரித்திருக்க முடியாது எனலாம்

Updated On : 14 மே, 2018 at 3:37 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:32 PM

கேன்ஸ் திரைப்பட விழாக்களின் ரெட் கார்பெட் அங்கீகாரம் என்பது எளிதில் யாருக்கும் கிடைத்துவிடக் கூடிய ஒன்றல்ல. திறமை, அழகு, மற்றும் ரசிகர்களின் வரவேற்பு என பல விஷயங்களை உள்ளடக்கியது அது. இந்தச் சிறப்புமிக்க பெருமையை பல ஆண்டுகளாக பெற்று வருபவர் ஐஸ்வர்யா ராய்.

ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இந்தியாவிலிருந்து பல பிரபல நடிகைகளுக்கு அழைப்பு வரும் என்றாலும், ஐஸ்வர்யா ராய்க்கு கிடைக்கும் புகழும் அங்கீகாரமும் தனிச் சிறப்புடையது. 

ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளும் 17-வது கேன்ஸ் திரைப்பட விழா இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில், தனது மகள் ஆராதியாவுடன் கலந்து கொண்டார். 44 வயதாகிவிட்டாலும் வசீகரமாக ஐஸ்வர்யா தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.  

Advertisement

தனது முதல் நாள் ரெட் கார்பெட் நிகழ்வின் போது ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த பட்டாம்பூச்சி ஆடை அனைவரின் கவனத்தையும் கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த ஆடை ஒரு நீளமான கவுன் வகையிலானது. பட்டாம்பூச்சி போன்ற வடிவமைப்பில் வயலட், சிவப்பு மற்றும் நீல நிறங்களில் த்ரெட் வொர்க் செய்யப்பட்டு ஸ்வர்தோஸ்கி கற்கள் பதிக்கப்பட்டு பிரத்யேகமாக ஐஸ்வர்யாவின் உடலமைப்புற்கென வடிவமைக்கப்பட்டது. தனது இரண்டாம் நாள் ரெட் கார்பெட் பங்கேற்புக்கு ஐஸ்வர்யா அணிந்திருந்த ஆடை ராமி காடி வடிவமைத்த வெண்ணிற ஆடையும் அனைவரின் வியப்பையும் அதிகரிக்கச் செய்துவிட்டது. அவருடைய கூந்தல் அலங்காரமும் சிறப்பு கவனம் பெற்றது. 

கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பளத்தில் மிக அழகாக ஜொலித்துள்ள ஐஸ்வர்யா ராயின் சில புகைப்படங்கள் இவை:

***

***

***

***

***

***

***

***

***

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.