செய்திகள்

நடிகர் அசோக் செல்வன் காதலிக்கும் இளம் பாடகி யார்?

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரின் மூலம் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத்

சினேகா

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரின் மூலம் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர், சூப்பர் சிங்கருக்காக சென்னைக்கு வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பிறகு சில திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. சொந்தமாக ஆல்பம் தயாரித்து வெளியிட்டு வருகிறார் பிரகதி.

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, பீட்சா 2, வில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் தமிழ் நடிகர். தற்போது பிரகதியும் அசோக் செல்வனும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இளம் ஜோடி இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இவர்களின் ஜோடிப் பொருத்தத்தைப் பாராட்டியும் வருகின்றனர் நெட்டிசன்கள்.

பிரகதி அசோக் செல்வனை விரைவில் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளதாக வதந்தி கோலிவுட்டில் நிலவினாலும், இவ்விஷயத்தை மறுத்தோ ஆதரித்தோ எவ்வித கருத்தையும் இருவரும் கூறியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூர்யா எனக்குத் துணையாக நிற்கிறார்: ஞானவேல் ராஜா

தலைக்கவசம் அணிந்தவர்களுக்கு பரிசு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

அரசு விடுதியில் பள்ளி மாணவர் பலி!

பிக் பாஸ் வெற்றியாளர் யார்? முன்னாள் போட்டியாளர்கள் கருத்து!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 30

SCROLL FOR NEXT