செய்திகள்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு நடிகர் விஜய் அளித்த பரிசு என்ன?

சினேகா

நேற்று (மே 15) இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஜய் ஒரு பிரத்யேமான பரிசை அளித்துள்ளார். அதில் அவர் ‘அன்புடன் விஜய்’ என்று கையெழுத்து போட்டு சந்தோஷுக்கு அனுப்பியுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். முதல் படத்திலேயே உடனடி கவனம் பெற்றார் சந்தோஷ். அதனைத் தொடர்ந்து, 'சூது கவ்வும்', 'குக்கூ', 'ஜிகர்தண்டா', 'மெட்ராஸ்', ஆகிய படங்களையும் 'கபாலி', 'காலா’ ஆகிய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படப் படங்களுக்கு இசையமைத்து மக்கள் மனத்தை கொள்ளை கொண்டார்.

தனது பிறந்த தினமான நேற்று, மனைவியுடன் ரஜினியிடம் ஆசி பெற்றார் சந்தோஷ். ‘இந்த தினத்தின் காலை எனக்கு மிகவும் முக்கியமானது, எனது காலாவைச் சந்தித்தேன்’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார் சந்தோஷ்.

விஜய் நடித்த 'பைரவா' படத்திற்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். ‘வரலாம் வரலாம் வா...’, என்ற தீவிரமான பாடல் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துவிட்டது. இருவருக்கும் நல்ல நட்பு உண்டு. சந்தோஷின் பிறந்த நாளுக்கு விஜய் சிறப்பு பரிசு ஒன்றை அனுப்பி, தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.  அதுவொரு கிரிக்கெட் பேட் . 'ச' 'நா' என்று எழுதப்பட்டிருந்த அந்த க்ரிக்கெட் பேட் சந்தோஷ் நாராயணனுக்காக விஜய் பிரத்யேகமாக வடிவமைத்தது. பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பா என்று பதிவிட்டு, அன்புடன் விஜய் என்று தனது கையெழுத்தை போட்டுத் தந்துள்ளார்.

'எனக்காக சிறப்பு பரிசு தயாரித்து கொடுத்த எனதன்பு விஜய் அண்ணாவுக்கு நன்றி. இது என் வாழ்நாளில் மறக்க முடியாத பரிசாக இருக்கும் ’ என்று சந்தோஷ் நாராயணன் தனதுட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணனுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் அவரது ரசிகர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT