செய்திகள்

அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது!

நேற்று மே 18 ஆம் தேதி ஐரோப்பாவுக்கான இந்தியத் தூதரக அலுவலகத்தில் ‘ஈரோப் டே 2018’ விழா அனுசரிக்கப்பட்டது. அந்த விழாவில் அமிதாப்புக்கு இந்த கெளரவ விருது வழங்கப்பட்டது. 

சரோஜினி

தனது திரைப்படங்கள் வாயிலாக இந்தியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இணைப்புப் பாலமாகச் செயல்பட்டதற்கு அமிதாப் பச்சனுக்கு கெளரவ விருது!

வெள்ளியன்று இரவு அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களைப் பதிவேற்றியிருந்தார். அந்த புகைப்படங்களில் அமிதாப்புடன் இருந்து அவருக்கு விருது வழங்கியவர் இந்தியாவுக்கான அரோப்பியத் தூதரான தோமஸ் கோஸ்லோவ்ஸ்கி. ஒரு திரைப்பட நடிகராக தனது தேர்ந்த பண்பட்ட நடிப்பின் மூலமாகத் தொடர்ந்து இந்தியாவுக்கும், ஐரோப்பாவுக்குமான இணைப்புப் பாலமாக  அமிதாப் செயல்பட்டு வருவதால் அவருக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது வழங்கி கெளரவித்துள்ளதாக ஐரோப்பியத் தூதர் தெரிவித்துள்ளார்.

அமிதாப்பின் திரைப்படங்கள் அனைத்துமே ஐரோப்பியர்களை மிக நெருக்கமாகக் கவரும்படியான கதையம்சம் கொண்டவையாக இருப்பதோடு இந்தியக் கலாச்சாரத்தை ஐரோப்பியர்கள் மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் இருப்பதால் அங்குள்ளவர்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன. எனவே அமிதாப்புக்கு இந்த விருதை வழங்குவதில் பெருமை கொள்வதாக ஐரோப்பிய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். நேற்று மே 18 ஆம் தேதி ஐரோப்பாவுக்கான இந்தியத் தூதரக அலுவலகத்தில்  ‘ஈரோப் டே 2018’ விழா அனுசரிக்கப்பட்டது. அந்த விழாவில் அமிதாப்புக்கு இந்த கெளரவ விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே பிக் பி தற்போது அமீர்கானுடன் இணைந்து நடித்து வெளிவரவிருக்கும் தனது புதிய திரைப்படமான ;தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ மற்றும் சிரஞ்சீவியின்  ‘சைரா நரசிம்ம ரெட்டி’ உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

மேட்டூர் அணை நிலவரம்!

சொல்லப் போனால்... ராகுல், தேர்தல் ஆணையம், டிரம்ப்... அல்லோலகல்லோலம்!

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

SCROLL FOR NEXT