சென்னை: பிரபல வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளரும், நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை எழுதி ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘எதிர்நீச்சல்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ஆர்.ஜே. பாலாஜி. பின்னர் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘வடகறி’, ‘தேவி’, ‘காற்று வெளியிடை’, ‘ஸ்பைடர்’, ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.
அத்துடன் தற்பொழுது கீ’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘யங் மங் சங்’, ‘விசுவாசம்’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை எழுதி ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ஆர்.ஜே. பாலாஜி அரசியலில் இறங்கப் போவதாகவும், தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் ஒரு தகவல் வெளியானது. அத்துடன் அவரை வரவேற்று சுவர் விளம்பரம், கட்சிக்கொடி என வரிசையாக வெளியானது. இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.
ஆனால் தற்பொழுது அது ஒரு படத்துக்கான விளம்பரம் என தெரியவந்தது. ‘எல்.கே.ஜி.’ என்று அந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. அரசியல் விமர்சனப் படமாக உருவாக உள்ளதோ என்று என்னும்படி படங்கள் அமைந்துள்ளன. ஹீரோவாக பாலாஜி நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார்.
புதுமுக இயக்குனர் பிரபு இயக்கும் இந்த படத்தினை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி எடிட் செய்கிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைப்பை கவனத்துக்கு கொள்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.