செய்திகள்

தீபிகா படுகோனுக்கு இது தேவையா? வைரலாக விமரிசிக்கும் சமூக வலைத்தளங்கள்! (படங்கள்)

சர்ச்சைகளில் சிக்குவதும், விமரிசனத்துக்கு உள்ளாவதும் சில நடிகைகளுக்கு அடிக்கடி நிகழும்.

ராக்கி

சர்ச்சைகளில் சிக்குவதும், விமரிசனத்துக்கு உள்ளாவதும் சில நடிகைகளுக்கு அடிக்கடி நிகழும். அதில் குறிப்பிடத்தக்கவர் தீபிகா படுகோன். பாலிவுட் மீடியா அவரின் ஒவ்வொரு அசைவையும் குறி வைத்து, அவர் என்ன செய்தாலும் அதை செய்தியாக்கிவிடும்.

அண்மையில் நடந்த கேன்ஸ் திரைவிழாவில் ரெட் கார்பெட்டில் தீபிகா படுகோன் பங்கு பெற்றபோது அவரின் உடையலங்காரத்தை கேலி செய்து நெட்டிசன்கள் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். 

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆர்வத்துடன் பங்கேற்கும் நடிகைகளுள் ஒருவர் தீபிகா படுகோன். வித்யாசமான ஆடைகளில் ரெட் கார்பெட்டில் அவர் நடந்து வரும் அழகை ரசிக்க பல்லாயிரம் ரசிகர்கள் உண்டு. ஆனால் இந்த வருடம் அவர் கடுமையான விமரிசனத்துக்கு உள்ளானார்.

பிங்க் வண்ண ஆடை அணிந்ததால் பஞ்சு மிட்டாய் நினைவு வருகிறது என்று ஒரு ரசிகரும், தீபிகா நாக்கை துருத்திக் கொண்டிருப்பது போல போஸ் கொடுத்ததும் அவரது உடையின் டிசைனும் டைனோசரை நினைவுபடுத்துகிறது என்று இன்னொரு ரசிகரும் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளனர்.

தமிழ் நெட்டிசன் ஒருவர் இரட்டை இலை சின்னத்தை தீபிகாவின் படத்துடன் இணைத்து, அவருக்கு தமிழ் வேர் உள்ளதென கூறியிருக்கிறார். 

இதையெல்லாம் பார்த்தாரா இல்லை தவிர்த்தாரா என்பது பத்மாவத் நாயகிக்கே வெளிச்சம். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

SCROLL FOR NEXT