செய்திகள்

நீதிகேட்டு மண்ணில் சிந்திய ரத்தம் ஒரு போதும் உலராது! எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்!

நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில்

சினேகா

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் எட்டு உயிர்கள் பலியாகியுள்ளன. கலவரக்காட்சிகளை வீடியோவில் பார்த்த போது எழுந்த கேள்வி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களா வாகனங்களுக்கு தீ வைக்கிறார்கள். யாரோ புல்லுருவிகள் ஊடுபுகுந்திருக்கிறார்கள்.. ஆனால் இதற்காக பழிவாங்கப்பட்டது போராட்டக்கார்களின் உயிர். துப்பாக்கியை உயர்த்தியபடியே வாகனத்தின் மீது பவனி வரும் காவலர்களைப் பாருங்கள். கார்ப்பரேட் நலம் காக்க எப்படி பணியாற்றுகிறார்கள் என்பது புரியும் .

நூறு நாட்களுக்கும் மேலாக அமைதிவழியில் போராடிய மக்களை இன்று வன்முறையாளர்களாக அரசு சித்தரிக்கிறது. ஜல்லிகட்டு போராட்டத்திலும் முடிவு இது போல தான் உருவாக்கபட்டது. அப்பாவி உயிர்களை கொன்று குவித்து வேட்டையாடுவது அநீதியின் உச்சம்.

நீதிகேட்டு மண்ணில் சிந்திய ரத்தம் ஒரு போதும் உலராது. குருதி கறை படிந்த மண் நீதியை அடைந்தே தீரும்.

ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடவும். துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாக இருந்த அரசை கண்டிக்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT