செய்திகள்

சாதனை மேல் சாதனை: 4 நாள்களில் ரூ. 150 கோடி வசூலைத் தாண்டிய சர்கார் படம்!

விஜய் நடித்து சமீபத்தில் வெளியான சர்கார் படம் முதல் நான்கு நாள்களில் ரூ. 150 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது...

எழில்

விஜய் நடித்து சமீபத்தில் வெளியான சர்கார் படம் முதல் நான்கு நாள்களில் ரூ. 150 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். 

சர்கார் படத்தில், தமிழக அரசின் இலவசப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினார்கள். பிறகு சர்கார் படம் மறு தணிக்கை செய்யப்பட்டு, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டதால், சர்கார் படப் பிரச்னை முடிவுக்கு வந்து விட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். இனி அதிமுகவினர் போராட்டம் எதுவும் செய்ய மாட்டார்கள். நடிகர் விஜய்க்கும், தங்களுக்கும் இடையே எந்தப் பிரச்னையும் கிடையாது என்றார்.  

இந்நிலையில் இந்தப் படம் முதல் நான்கு நாள்களில் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது. தெறி, மெர்சல் படங்களுக்குப் பிறகு ரூ. 150 கோடியை எட்டிய மூன்றாவது விஜய் படம் என்கிற பெருமையை சர்கார் படம் பெற்றுள்ளது. 

தமிழ்நாட்டில் நான்கு நாள் வசூலாக ரூ. 75 கோடி கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கி, கத்தி, தெறி படங்களின் வசூலை உடைத்துள்ள சர்கார், விரைவில் தமிழ்நாட்டில் மெர்சல் படத்துக்குக் கிடைத்த வசூலையும் தாண்டவுள்ளது. 

மேலும் சென்னையில் இந்தப் படம் நான்கு நாளில் கிட்டத்தட்ட ரூ. 7 கோடி வசூலித்துள்ளது. கடந்த இரு நாள்களாக அதிமுகவினர் போராட்டம் காரணமாக படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்பட்டது. இல்லையெனில் இதைவிடவும் அதிக வசூலை எட்டியிருக்கும். மேலும் ஆந்திரா/ தெலங்கானா பகுதிகளில் சர்கார் படம் நான்கு நாள்களில் ரூ. 11 கோடி வசூலித்து சாதனை செய்துவருகிறது. 

சர்கார் வசூல் குறித்த ட்வீட்களை ரீட்வீட் செய்துவருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதையடுத்து, வசூல் விவரங்கள் குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

SCROLL FOR NEXT