பொங்கலுக்குத் தயார்: விஸ்வாசம் படப்பிடிப்பு நிறைவு
விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இத்தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...
அஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு இசை - இமான்; ஒளிப்பதிவு - வெற்றி. பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார் சிவா. அதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அதன்பிறகு அஜித் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கிவருகிறார்.
சிவா இயக்கிய வீரம் படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார் அஜித். அதற்குப் பிறகு வேதாளம் படத்தில் தொடங்கி விஸ்வாசம் வரை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் சிவாவின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் அஜித்.
Advertisement
இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இத்தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொங்கல் சமயத்தில் வெளியாவதற்குப் படம் தயாராகி வருகிறது.