முகப்பு
செய்திகள்

புதிய படத்தைத் தொடங்கினார் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி: தொடக்க விழாவின் விடியோ!

ஆர் ஆர் ஆர், 2020-ம் வருடம் ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 19 முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:17 PM
பகிர்:

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த வருடம் வெளியான படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மகத்தான சாதனைகளைப் படைத்தது. இந்நிலையில் ராஜமெளலியின் அடுத்தப் படமான ஆர் ஆர் ஆர்-ன் தொடக்கவிழா நேற்று நடைபெற்றுள்ளது.

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் இந்தப் படத்தை இயக்கவுள்ளார் ராஜமெளலி. டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்முறையாக ஜூனியர் எடிஆரும் ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இணைந்துள்ளார்கள். ஆர் ஆர் ஆர் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - கே.கே. செந்தில் குமார். 

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் ராஜமெளலியின் குருவான மூத்த இயக்குநர் கே. ராகவேந்திர ராவும் ராம் சரணின் தந்தையும் பிரபல நடிகருமான சிரஞ்சீவியும் கலந்துகொண்டார்கள். பிரபாஸ், ராணா டகுபதி, அல்லு அரவிந்த் போன்றோரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள். ஆர் ஆர் ஆர் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் சிலரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டாலும் நடிகைகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆர் ஆர் ஆர், 2020-ம் வருடம் ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 19 முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

Advertisement

ஆர் ஆர் ஆர் படத் தொடக்க விழாவின் விடியோ:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments