முகப்பு
செய்திகள்

அடங்க மறு படத்தின் வெளியீட்டுத் தேதி: ஜெயம் ரவி ட்வீட்

அடங்க மறு படம் முதலில் நவம்பர் 16 அன்று வெளியாக இருந்தது. ஆனால் அந்தத் தினத்தில் சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாக இருந்ததால்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:

டிக்டிக்டிக் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடித்துள்ள படம் - அடங்க மறு.  சரணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் தங்கவேல் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ஜெயம் ரவியின் 24-வது படம் இது. தெலுங்கு நடிகையான ராஷி கண்ணா, ஜெயம் ரவியின் ஜோடியாக நடித்துள்ளார். இசை - சாம் சிஎஸ். 

இந்நிலையில் அடங்க மறு படம் முதலில் நவம்பர் 16 அன்று வெளியாக இருந்தது. ஆனால் அந்தத் தினத்தில் சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாக இருந்ததால் அதன் வெளியீடு தள்ளிப் போனது. இந்நிலையில் டிசம்பர் 14 அன்று அடங்க மறு வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதை ஜெயம் ரவி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் ட்வீட் செய்ததாவது:

தயாரிப்பு நிறுவனத்தால் அடங்க மறு படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும். தவறான தகவல்களின் அடிப்படையில் யூகம் எதுவும் செய்யவேண்டாம் என ட்வீட் செய்துள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments