எஸ்.எஸ். ராஜமெளலியின் மகனுக்கு ஜனவரியில் திருமணம்!
பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலியின் மகன் கார்த்திகேயாவின் திருமணம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது...
பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலியின் மகன் கார்த்திகேயாவின் திருமணம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.
ராஜமெளலியிடம் யூனிட் இயக்குநராகப் பணிபுரியும் கார்த்திகேயா, பாடகி பூஜா குமாரைக் காதலித்து வருகிறார். பூஜா, தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவின் அண்ணன் ராம் பிரசாத்தின் மகள். கடந்த செப்டம்பர் மாதம் கார்த்திகேயா - பூஜா ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement