முகப்பு
செய்திகள்

தெலுங்கு பிக் பாஸ் 2: போட்டியை வென்றார் மக்கள் ஆதரவு பெற்ற நடிகர் கெளசல்!

பிக் பாஸ் கோப்பையைப் பெற்றதோடு பரிசுத்தொகையாக ரூ. 50 லட்சத்தையும் வென்றுள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

ஸ்டார் மா தொலைக்காட்சியில் கடந்த ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகி வந்த தெலுங்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. 

தெலுங்கு பிக் பாஸின் முதல் பாகத்தை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார். முதல் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி 71 நாள்களில் நிறைவுபெற்றது. நடிகர்கள் நவ்தீப், சிவ பாலாஜி, ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, சமீர், சம்பூர்ணேஷ் பாபு, தன்ராஜ், பிரின்ஸ் நடிகைகள் அர்ச்சனா, முமைத் கான், ஜோதி, ஹரி தேஜா, திக்‌ஷா பந்த், மாடலிங் துறையைச் சேர்ந்த கத்தி கார்த்திகா, பாடகிகள் மது ப்ரியா, கல்பனா ராகவேந்தர் மற்றும் மகேஷ் கத்தி என 16 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். இறுதிச்சுற்றில் நடிகர் சிவ பாலாஜி வெற்றி பெற்று பரிசுத்தொகையான ரூ. 50 லட்சத்தைத் தட்டிச் சென்றார். கடந்த 14 வருடங்களாகத் திரைத்துறையில் உள்ள சிவ பாலாஜி தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் நடித்துள்ளார். இரண்டாம் இடம், நடிகர் ஆதர்ஷ் பாலகிருஷ்ணாவுக்குக் கிடைத்தது. 

இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் நானி தொகுத்து வழங்கினார். பாடகி கீதா மாதுரி, நடிகர்கள் கெளசல், சம்ரத், அமித் திவாரி, தனிஷ், கிரீத்தி தமாராஜூ, நடிகைகள் தேஜஸ்வி, பானு ஸ்ரீ, ஷ்யாமளா, டிவி 9 தொகுப்பாளர் தீப்தி, விமரிசகர் பாபு கோகினேனி, ராப் பாடகர் ரோல் ரிடா, டப்ஸ்மாஷ் கலைஞர் தீப்தி, ஆர்ஜே கணேஷ், மாடல் சஞ்சனா, சாமானியர் நுதன்  என 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.

Advertisement

இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் 2 நிகழ்சியின் வெற்றியாளராக நடிகர் கெளசல் அறிவிக்கப்பட்டுள்ளார். இறுதிச்சுற்றில் கடைசி இருவராக கெளசலும் பாடகி கீதாவும் தகுதி பெற்றார்கள். வெற்றியாளரின் பெயரை நடிகர் வெங்கடேஷ் அறிவித்தார். 37 வயது கெளசல், பிக் பாஸ் கோப்பையைப் பெற்றதோடு பரிசுத்தொகையாக ரூ. 50 லட்சத்தையும் வென்றுள்ளார். கடைசி வாரத்தில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற கீதா மாதுரி, தனிஷ், தீப்தி, சம்ரத் ஆகியோருக்குத் தலா ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது.

1999-ல் மகேஷ் பாபுவின் Rajakumarudu படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமான கெளசல், பிரபாஸ் நடித்து 2011-ல் வெளியான மிஸ்டர் பெர்ஃபெக்ட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். சின்னத்திரையில் பல தொடர்களிலும் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கு பிக் பாஸ் 2 போட்டியாளர்கள்

1. கீதா மாதுரி (பாடகி)

2. அமித் திவாரி (நடிகர்)

3. தீப்தி நல்லமொது (டிவி9 தொகுப்பாளர்)

4. தனிஷ் (நடிகர்)

5. பாபு கோகினேனி (விமரிசகர்)

6. பானு ஸ்ரீ (நடிகை)

7. ரோல் ரிடா (ராப் பாடகர்)

8. ஷ்யாமளா (நடிகை)

9. கிரீத்தி தமாராஜூ (நடிகர்)

10. தீப்தி சுனைனா (டப்ஸ்மாஷ் கலைஞர்)

11. கெளசல் (நடிகர்)

12. தேஜஸ்வி (நடிகை)

13. சம்ரத் ரெட்டி (நடிகர்)

14. கணேஷ் (ஆர்ஜே)

15. சஞ்சனா அண்ணே (மாடல்)

16. நுதன் நாய்டு (சாமானியர்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments