முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் பிரபலங்களுடன் இணைந்து செக்கச் சிவந்த வானம் படத்தைப் பார்த்த சிம்பு!

பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ரித்விகா, ஐஸ்வர்யா, மஹத், ஜனனி, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடிகர் சிம்புவுடன் இணைந்து...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா போன்றோர் நடித்துள்ளார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. 

இந்நிலையில் பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ரித்விகா, ஐஸ்வர்யா, மஹத், ஜனனி, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடிகர் சிம்புவுடன் இணைந்து செக்கச் சிவந்த வானம் படத்தை சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் கண்டுகளித்துள்ளார்கள். இதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் 2 இறுதிச்சுற்றில் நடிகை ரித்விகா வென்று ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை வென்றுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments