செய்திகள்

'பரியேறும் பெருமாள்' படம் நானாக தேடிப் போய் வாங்கிய வாய்ப்பு! கதிர் பேட்டி!

'மதயானைக் கூட்டம்' படத்தில் அறிமுகமான கதிர், தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர்.

DIN

'மதயானைக் கூட்டம்' படத்தில் அறிமுகமான கதிர், தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர். அடுத்தடுத்து 'கிருமி', 'விக்ரம் வேதா' என அவர் நடித்ததெல்லாம் முக்கியமான படங்கள். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'பரியேறும் பெருமாள்' கதிருக்கு மிக முக்கியமான சினிமாவாக அமைந்துள்ளது.

கதிர் பேசும் போது... 'பரியேறும் பெருமாள்' படம் நானாக தேடிப் போய் வாங்கிய வாய்ப்பு. இப்போது பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள். நான் வியந்து பார்க்கும் பல திரை ஆளுமைகள் மனம் திறந்து பாராட்டுகிறார்கள். நடிகர் விஜய் தொடங்கி பலர் பாராட்டினார்கள். என்னுடன் நடித்த நாய் கருப்பி, வேட்டை நாய் ரகம்.. பார்க்க பயங்கரமாக இருந்தாலும் பாசம் காட்டுவதிலும் அசர வைத்துவிடும். ஆரம்ப நாட்களில் வேட்டைக்குத்தான் போகிறோம் என நினைத்துக் கொண்டு எங்களுடன் துள்ளிகுதித்து ஓடியது. அப்புறம் நான்கு நாட்களில், அதற்கே படப்பிடிப்பு பழகி விட்டது. என்னதான் நன்றாக நடித்திருந்தாலும் சினிமா பின்னணி இல்லாமல் வரும் என்னைப் போன்ற ஆட்களுக்கு எங்களையும் படத்தையும் மக்களிடம் உரியவகையில் கொண்டு சேர்த்து மேலே வருவது கஷ்டமான ஒன்றுதான்.. ஆனால் கதையும் கடந்து மேலேவர ஏதோ ஒரு உந்துசக்தி தேவைப்படுகிறது அடுத்து வெளியாகும் சிகையும் அப்படித்தான் இருக்கும்'' என்கிறார் கதிர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT