செய்திகள்

நான் மீண்டும் வெற்றியுடன் வருவேன்! அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா விமரிசகர்களுக்கு பதிலடி!

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் ‘நோட்டா’. படத்தின் போஸ்டர் மற்றும் டீஸர்கள்

சினேகா

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் ‘நோட்டா’. படத்தின் போஸ்டர் மற்றும் டீஸர்கள் வெளிவந்த சமயத்தில் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கிய படமிது. விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் இப்படம் வெளியானது.

நோட்டாவுடன் அதே சமயத்தில் வெளியான 96, ராட்சசன் மற்றும் செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களும் வெளிவந்தன. மற்ற படங்கள் அதிகளவு ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற நிலையில், நோட்டா கவனம் பெறாமல் போனதுடன் எதிர்மறையாகவும், கலவையான விமரிசனங்களை பெற்றது. இது குறித்து தனது ட்விட்டரில் விஜய் தேவரகொண்டா பதிவிட்டது.

நோட்டோ படத்தைப் பார்த்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. இந்தப் படம் சில ரசிகர்களால் சரியாக வரவேற்கப்படவில்லை. நான் அதற்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை. அதற்காக நான் பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கிறேன். இந்த படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்களை கேட்டேன். இது எனக்கு ஒரு பாடம். நான் கணக்கிட்ட சில விஷயங்கள் தவறாகிவிட்டன. வெற்றியோ, தோல்வியோ அது நான் யார் என்பதை நிச்சயம் பாதிக்காது. என் தோல்விகளை கொண்டாடுபவர்கள். நன்றாக கொண்டாடிக் கொள்ளுங்கள். நான் மீண்டும் வெற்றியுடன் வருவேன் என்று கூறியிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குலசேகரம் அருகே பெண் தற்கொலை வழக்கு: வருவாய் ஆய்வாளா் கைது

நேபாள பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய தூதா்

சட்டவிரோத பந்தைய செயலி வழக்கு: யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, சோனு சூட்டுக்கு சம்மன்

பிரதமருக்கு பரிசளிக்கப்பட்ட 1,300 பொருள்கள் ஏலம்

சைவ, வைணவம் குறித்த சா்ச்சைப் பேச்சு: பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT