செய்திகள்

மீ டூ: யார் மீது புகார் தெரிவிக்கிறார் நடிகை லேகா வாஷிங்டன்?

ட்வீட்டில், யார் பெயரையும் குறிப்பிடாததால் லேகா யாரைச் சொல்கிறார், படத்தின் கதாநாயகனையா அல்லது...

எழில்

அண்​மைகால​மாகச் சமூகவலைத்​த​ளங்​க​ளில் மீ டூ எனும் தலைப்​பில் பெண்​கள் தங்​க​ளுக்கு நேர்ந்த பாலி​யல் துன்​பு​றுத்​தல்​க​ளை​யும், கொடு​மை​க​ளை​யும் பகிர்ந்து வரு​வது பர​வ​லாகக் கவ​னத்​தைப் பெற்று வரு​கி​றது. குறிப்​பாக, சில முக்கிய பிர​மு​கர்​க​ளுக்கு எதி​ராக முன்​வைக்​கப்​ப​டும் குற்​றச்​சாட்​டு​க​ளும் பெரும் பர​ப​ரப்பை ஏற்​ப​டுத்தி வரு​கின்​றன.

இந்நிலையில் நடிகை லேகா வாஷிங்டன், மீ டூ குறித்து ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். ஒரு வார்த்தை: கெட்டவன் #மீடூ என்று ட்வீட் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜெயம் கொண்டான், கல்யாண சமையல் சாதம் போன்ற படங்களில் லேகா வாஷிங்டன் நடித்துள்ளார். 

பத்து வருடங்களுக்கு முன்பு கெட்டவன் என்கிற படத்தில் சிம்புவும் லேகா வாஷிங்டனும் நடித்தார்கள். சில நாள்கள்  படமாக்கப்பட்ட அந்தப் படம் பிறகு கைவிடப்பட்டு இன்றுவரை மீண்டும் தொடராமல் உள்ளது. 

ட்வீட்டில், யார் பெயரையும் குறிப்பிடாததால் லேகா யாரைச் சொல்கிறார், படத்தின் கதாநாயகனையா அல்லது படக்குழுவினரயா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து லேகாவின் இந்த ட்வீட்டுக்கு சிம்பு ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளார்ள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT