முகப்பு
செய்திகள்

சினிமா இலக்கியம்: பரியேறும் பெருமாள் படத்தைப் பாராட்டும் ஷங்கர்!

இப்படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர், வெகுவாகப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியதாவது...

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:05 AM
பகிர்:

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய பா.இரஞ்சித் தயாரிப்பாளராக அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள இவர், பரியேறும் பெருமாள் என்ற படத்தைத் தயாரித்துள்ளார். 

இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். 

திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இக்கதை எழுதப்பட்டுள்ளது.  காதல், ஆக்‌ஷன் அடங்கிய ஜனரஞ்சகமான படமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் கதாநாயகனாகவும் ஆனந்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இசை -  சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு - ஸ்ரீதர். கலை - ராமு.

Advertisement

செப்டம்பர் 28 அன்று வெளியான இப்படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர், வெகுவாகப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியதாவது: 

பரியேறும் பெருமாள் படம் திரைப்பட இலக்கியம் போல உள்ளது. மேலும் ஆழமாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவது போலவும் உள்ளது. மாரி செல்வராஜ் பிரமாதமாக இயக்கியுள்ளார் எனப் பாராட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments