முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய டேனியல் காதலியை மணந்தார்! (படங்கள்)

டேனியல், தன்னுடைய காதலி டெனிஷாவைத் திருமணம் செய்துகொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்...

Updated On : 3 செப்டம்பர், 2018 at 5:43 PM
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் டேனியல் நேற்று வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து வெளியே வந்த டேனியல், தன்னுடைய காதலி டெனிஷாவைத் திருமணம் செய்துகொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் அவர் எழுதியதாவது:

குட்டு என்கிற அழகான டெனிஷா டேனியலை என் மனைவியாக உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். எளிமையான பதிவுத்திருமணம் நடந்துள்ளது. குடும்பச் சூழல் காரணமாக இந்த அழகான தருணத்தை இதுவரை பகிர்ந்துகொள்ளமுடியாமல் போனது. கணவன், மனைவியாக எங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறோம். அதற்கு நீங்கள் வாழ்த்தவேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.