முகப்பு
செய்திகள்

ரஜினி - ஷங்கரின் 2.0:  டீசர் வெளியீடு குறித்து புதிய அறிவிப்பு

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:42 PM
பகிர்:

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருகிறது.  நவம்பர் 29 அன்று, அதாவது தீபாவளிக்குப் பிறகு 2.0 படம் வெளியாகவுள்ளதாக லைகா நிறுவனம்  சமீபத்தில் தகவல் அளித்தது.

இந்நிலையில் படத்தின் டீசர் செப்டம்பர் 13 அன்று வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3டி முறையில் டீசரைக் கண்டுமகிழுங்கள் என்றும் ரசிகர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் புதிய போஸ்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments