முகப்பு
செய்திகள்

வெற்றிமாறன் தயாரிக்கும் ‘சங்கத் தலைவன்’ படப்பிடிப்பில் வெளியிடப்பட்ட நூல்!

இப்படத்தின் படப்பிடிப்பில் பாரதிநாதனின் புதிய நூலான ‘தறிச் சத்தம்’ கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்டது....

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:45 PM
பகிர்:

எழுத்தாளர் இரா. பாரதிநாதனின் ‘தறியுடன்’ நாவல் தற்போது ‘சங்கத் தலைவன்’ என்ற தலைப்பில் இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பில் படமாகி வருகிறது. இதில் சமுத்திரக்கனி, கருணாஸ், விஜே ரம்யா போன்றோர் நடித்து வருகின்றனர். இயக்கம் - மணிமாறன். இவர் உதயம் என்எச்4, புகழ் ஆகிய படங்களை இயக்கியவர்.

இப்படத்தின் படப்பிடிப்பில் பாரதிநாதனின் புதிய நூலான ‘தறிச் சத்தம்’ கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்டது. நூலை சமுத்திரக்கனி வெளியிட கருணாஸ் பெற்றுக்கொண்டார். படத்தின் இயக்குநர் மணிமாறன், நீலம் பவுண்டேஷன் முத்தமிழ், நடிகை ரம்யா, நூலாசிரியர் இரா.பாரதிநாதன் மற்றும் பதிப்பாளர் பிரபாகரன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments