செய்திகள்

பாகுபலி, சாஹூவைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் இதுதான்!

பாகுபலி படத்தின் பெரும் வெற்றிக்குப் பின் டோலிவுட் ஹீரோ பிரபாஸ் ‘சாஹூ’ என்ற பெரிய பட்ஜெட் படத்தில் நடித்தார்.

சினேகா

பாகுபலி படத்தின் பெரும் வெற்றிக்குப் பின் டோலிவுட் ஹீரோ பிரபாஸ் ‘சாஹூ’ என்ற பெரிய பட்ஜெட் படத்தில் நடித்தார். இந்தப் படம் வெளியான பின்னர், பிரபாஸ் இயக்குனர் கே.கே.ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் பெரிய பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறது இந்தப் படம். இந்தப் படத்தில் பிரபாஸுக்கு நடிகை பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கின்றார்.

கோபி கிருஷ்ணா மூவிஸ் உடன் இணைந்து யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் துவக்க விழா அண்மையில் நடைபெற்றது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதி செய்ய, அமித் திரிவேதி இசையமைத்து ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். பிரபாஸ் ரசிகர்களுக்கு இந்தச் செய்தி மகிழ்ச்சியளித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இதனை பகிர்ந்து அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT