செய்திகள்

குன்ஜான் சக்சேனா வாழ்க்கை படத்தில் நடிக்கிறார் ஜான்வி கபூர்!

சினிமா மற்றும் அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் உருவாகி வரும் வேளையில்

தினமணி செய்திச் சேவை

சினிமா மற்றும் அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் உருவாகி வரும் வேளையில்,  விளையாட்டு துறையை சேர்ந்த தோனி, சச்சின், சாய்னா, மேரிகோம் போன்றவர்களின் வாழ்க்கை படங்களும் உருவாகின்றன. அடுத்து முதல் பெண்மணியாக விமான பைலட் ஆகி கார்கில் போரில் பங்கெடுத்த குன்ஜான் சக்சேனா வாழ்க்கை சரித்திரம் பல்வேறு மொழிகளில் படமாக உள்ளது. குன்ஜான் வேடத்தில் நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

இதையடுத்து சமீபத்தில் குன்ஜானை நேரில் சந்தித்த அவர் கார்கில் போரில் அவர் ஆற்றிய சேவைக்குப் பாராட்டு தெரிவித்ததுடன் அவருடைய அனுபவம் பற்றியும் கேட்டறிந்தார். 1999-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே நடந்த கார்கில் போரில் காயம் அடைந்த வீரர்களை போர் நடக்கும் பகுதிகளுக்கும், அங்குள்ள முகாம்களுக்கும் விமானத்தில் சென்று அவர்களை மீட்டு வரும் பணியில் குன்ஜான் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

'தடக்' என்ற ஹிந்தி படம்  மூலம் நடிகையாக அறிமுகமான ஜான்வி கபூர் அடுத்து விமான வீராங்கனையாக வேடமேற்றிருப்பதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் தொகுதியில் போட்டியிட அதிமுகவினா் விருப்ப மனு

கரூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் 79,690 வாக்காளா்கள் நீக்கம்

ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா

‘இறுதி வாக்காளா் பட்டியல் வரும் 2026 பிப்ரவரியில் வெளியாகும்’

SCROLL FOR NEXT