செய்திகள்

விஜய் நடித்துள்ள சர்கார்: ரஹ்மான் இசையமைப்பில் முதல் பாடல் வெளியீடு!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு... 

எழில்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்தடுத்த கட்டங்களாக இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த சிம்டாங்காரன் என்கிற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சிம்டாங்காரன் என்றால் கவர்ந்து இழுப்பவன், பயமற்றவன், துடுக்கானவன்.  கண் சிமிட்டாமல் சிலரைப் பார்க்கத் தோன்றும். அந்த ஒருவன் தான் சிம்டாங்காரன் என்று பாடலாசிரியர் விவேக் விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பேக் கொடுத்த நிவின் பாலி... வசூலில் கலக்கும் சர்வம் மாயா!

புலம்பெயர் தொழிலாளர் மீதான தாக்குதல் தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவு! - திருமாவளவன்

2026 புத்தாண்டு: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

பட்ஜெட் விலையில் உயர்தர இசை... சோனி சவுண்ட்பார் அறிமுகம்!

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம்! பிளவா?

SCROLL FOR NEXT