இணையத்தில் அடிக்கடி ஒரு விடியோ வைரலாகி பரபரப்பாகிவிடும். இந்த முறை வைரல் ரேஸில் முந்தியிருப்பவர் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய்.
சஞ்சய் கடந்த 2009-ல் தந்தையுடன் `வேட்டைக்காரன்' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். தற்போது ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் ஒன்றினை படித்து முடித்துள்ள சஞ்சய், அடுத்து திரைத் துறையில் முழு வீச்சுடன் இறங்க முடிவெடுத்துள்ளார். அதன் தொடக்கமாக குறும்படம் ஒன்றினை இயக்கி நடித்துள்ளார். ‘ஜங்ஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் 11 விநாடிகள் கொண்ட டீஸரை இன்று சஞ்சய் வெளியிட்டுள்ளார்.
டீஸர் வெளியானதும் விஜய் ரசிகர்களிடமிருந்து பலத்த பாராட்டுகளைப் பெற்றது. ரசிகர்கள் இந்த டீஸரை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
அண்மையில் விஜய்க்கு ஐரா சார்பில் சிறந்த சர்வதேச நடிகர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இரட்டிப்பு மகிழ்ச்சியாக அவரது மகன் நடித்துள்ள குறும்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளதால், விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ஹாட்ரிக்காக, இன்று 'சர்கார்' படத்தின் சிங்கிள் ட்ராக் பாடலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.